திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான ஆர். கே. பேட்டை திருவாலங்காடு, பள்ளிப்பட்டு, பொதட்டூர் பேட்டை, கே. ஜி. கண்டிகை ஆகிய பகுதிகளில் இரவு 9 மணி அளவில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் கழிவுநீருடன் மழை நீரும் கலந்து சாலைகளில் ஓடியதால் சாலையில் நடந்து செல்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். இருப்பினும் காலையில் இருந்து மாலை வரை வெயில் வாட்டி வந்த நிலையில் இரண்டாவது நாளாக இரவு பெய்த மழையால் பூமி குளிர்ச்சி அடைந்து, குளிர் காற்று வீசியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.