திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அடுத்த அம்பிளிக்கை, விருப்பாச்சி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட தக்காளி, தற்போது அறுவடைக்கு வந்துள்ளது. இதனால், மார்க்கெட்டில் வரத்து அதிகரித்துள்ளது. தவிர கர்நாடகா, ஆந்திராவை சேர்ந்த வியாபாரிகள், தங்களுக்கு தேவையான தக்காளியை உள்ளூரிலேயே கொள்முதல் செய்கின்றனர். இதனால் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த வாரம் 14 கிலோ தக்காளி பெட்டி ரூ.100 முதல் 150 வரை விற்பனையானது. தற்போது ரூ.50 முதல் 80 வரையே விற்பனை செய்யப்படுகிறது.