பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த இரு தினங்களாக டெல்லியில் முகாமிட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தமிழகம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வைத்தாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி சென்றுள்ளார். அங்கு அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக பாஜக, அதிமுக கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என இபிஎஸ் தெரிவித்திருந்தார்.