'யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்கத் தேவையில்லை'

55பார்த்தது
'யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்கத் தேவையில்லை'
யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்கத் தேவையில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஸ்டாலினின் வாக்கு வங்கி குறையும் அபாயத்தில் இருப்பதால், பிரிவினைவாத அரசியலை முன்னெடுப்பதாக குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுப்பது அரசியலில் அவல நகைச்சுவை. தமிழகத்தின் குரல், நாடெங்கும் ஒலிப்பது பாஜக தலைவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி