வினாடி வினா.. மாணாக்கர்களுக்கு பரிசு வழங்கிய அமைச்சர்

77பார்த்தது
வினாடி வினா.. மாணாக்கர்களுக்கு பரிசு வழங்கிய அமைச்சர்
மாநில அளவில் நடைபெற்ற இலக்கிய மன்றம் மற்றும் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பரிசுகளை வழங்கினார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று (மார்ச் 26) நடைபெற்ற நிகழ்ச்சியில், இலக்கிய மன்றம், வினாடி வினா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுக்கோப்பையை வழங்கி பாராட்டினார். முதன்மைச் செயலாளர் சந்திர மோகன், தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ், நாட்டுநலப் பணித் திட்ட இணை இயக்குநர் சசிகலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி