திருத்தணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சமூக நல்லிணக்க நடை பயணத்தை
திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவரும் பொன்னேரி எம்எல்ஏவுமான துரை சந்திரசேகர் தொடங்கி வைத்தார்.
திருத்தணி அரக்கோணம் சாலையில் மலைக்கோயில் அடிவாரத்தில் இருந்து சமூக நல்லிணக்க நடை பயணம் தொடங்கி திருத்தணி அரக்கோணம் சாலை, பஸ் நிலையம், நகராட்சி சாலை, அக்கையா சாலை, பழைய கமலா தியேட்டர் அருகில் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபின் திருத்தணி சித்தூர் சாலை சந்திப்பில் தெருமுனை பிரச்சார கூட்டத்துடன் சமூக நல்லிணக்க நடை பயணம் முடிவுற்றது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்