அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பாக போட்டியிடும் ஏ எல் விஜயன் இன்று காலை திருத்தணி ஒன்றியத்திற்கு உட்பட்ட காசிநாதபுரம், வேலஞ்சேரி, பொன்பாடி, சிவாடா, நெமிலி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அரக்கோணம் தொகுதி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளராக போட்டியிடும் ஏ. எல். விஜயனை ஆதரித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. அப்போது பெண்கள் அதிமுக வேட்பாளர் விஜயனுக்கு ஆரத்தி எடுத்தும், மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் கூட்டத்தில் வேட்பாளர் விஜயன் பேசியதாவது: - திமுக ஆட்சியில் மின்சார கட்டணம், கேஸ்விலை, அன்றாட பயன்படுத்தும் காய்கறி விலை உயர்வு காரணமாக சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வாழவே முடியாத சூழ்நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 70 வயதிற்கு மேலானவர். இவரை நீங்கள் வாக்களித்து வெற்றி பெற வைத்தால் அவர் வீட்டில் சென்று தூங்கி விடுவார். இளைஞரான என்னை வெற்றி பெற செய்தால் உங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் விரைந்து செயல்படுத்தி தருவேன். எனவே தமிழகத்தில் நல்லாட்சி அமைந்திட இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என விஜயன் தெரிவித்தார்.