திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த தெக்கலூர் காலனி பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளி மணி. இவர் நேற்று(செப்.10) இரவு தன் குடும்பத்தினருடன் வீட்டின் முன் கதவை திறந்து விட்டு தூங்கிக் கொண்டிருக்கும் போது 4 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு வீட்டில் உள்ளே புகுந்து உள்ளது. நள்ளிரவில் நல்ல உறக்கத்தில் இருந்தபோது வீட்டில் புகுந்த பாம்பு சத்தம் எழுப்பி உள்ளது.
சத்தத்தை கேட்ட கூலி தொழிலாளி மணி என்பவர் அலறியடித்து எழுந்து மின்விளக்கு போட்டு பார்த்த போது 4 அடி நல்ல பாம்பு படையெடுத்து நிற்பதைக் கண்டு அதிர்ந்து அலறி அடித்துக் கொண்டு பாம்பிடம் உயிர்தப்பிக்க வெளியே குடும்பத்தினருடன் ஓடினார். பின்பு திருத்தணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவயிடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் குளிர்சாதன பெட்டி அடியில் பதுங்கி இருந்த 4 அடி நல்ல பாம்பை பத்திரமாக பிடித்து அருகிலுள்ள வனப்பகுதியில் விட்டுவிட்டனர்.