மெரினா கடற்கரை அருகே கலங்கரை விளக்கத்திற்கு பின்புறம் லூப் சாலையில் இருந்த காவல் உதவி மையம் ஃபெஞ்சல் புயலால் 10 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு சேதமடைந்துள்ளது. அந்த நேரத்தில் காவலர்களோ, பொதுமக்களோ போலீஸ் பூத் அருகே இல்லாத காரணத்தால், உயிர் சேதம் ஏற்படவில்லை. மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகளும் காற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளன.