திருவள்ளூர் அருகே ஆழ்துளைக்கிணறு பைப் உடைந்து ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகும் அவலம்.
திருவள்ளூர் மாவட்டம் வெள்ளியூர் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆழ்துளை கிணறுகள் மூலமாக திருவள்ளூர் நகராட்சியில் வசிக்கும் பொது மக்களுக்கு குடி தண்ணீர் வினியோகம் நடைபெற்று வருகிறது வெள்ளியூர் சுற்று வட்டாரங்களில் கொசஸ்த்தலை ஆற்றை ஒட்டி நூற்றுக்கும் மேற்பட்ட ஆழ் துளைக்கிணறுகள் உள்ளன திருவள்ளூர் செங்குன்றம் நெடுஞ்சாலை ஓரம் அமைந்துள்ள ஆழ் துளைக்கிணறு பைப் உடைந்து மோட்டாரில் இருந்து வெளியேறும் தண்ணீர் வீணாகி வருகிறது. ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகி வருவதை தடுக்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் சாலை விவரம் உள்ள பள்ளத்தில் தேங்கி டெங்கு காய்ச்சல் உருவாக காரணமாகும் நல்ல தண்ணீரில் வாழக்கூடிய ஏ டி எஸ் கொசுக்கள் புழுக்கள் உருவாக வழிவகை செய்து வருகிறது எனவே இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.