இருசக்கர வாகனம் பழுது நீக்கும் பொழுது திடீர் தீ விபத்து

1048பார்த்தது
இருசக்கர வாகனம் பழுது நீக்கும் பொழுது திடீர் தீ விபத்து
ஆவடி அருகே இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடையில் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் பொழுது திடீர் தீ விபத்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்

சென்னை புறநகர் பகுதியான ஆவடிரெட்டி பாளையத்தைச் சேர்ந்தவர் ஞானசேகர், இவர், ஆவடி புதிய ராணுவ சாலையில் 'சாந்தி ஆட்டோ மொபைல்ஸ்' என்ற பெயரில் டூ வீலர் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார்.
வழக்கம்போல் இன்று, கடை ஊழியர்கள், இருசக்கர வாகனம்சர்வீஸ் க்கு வந்த 'யமஹா' fz பைக்கை பழுது பார்த்து கொண்டிருந்தனர்.

அப்போது வாகனத்தின், பேட்டரியில் மின் கசிவு ஏற்பட்டு புகை வெளியேறி, தீ பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது.
அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் கடையை விட்டு வெளியேறி ஆவடிதீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் தகவலறிந்து விரைந்து வந்தஆவடி தீயணைப்பு துறையினர் 10 நிமிடம் போராடி தீயை அணைத்தனர்.

அதற்குள், யமஹா எப். ஈசட் உட்பட சர்வீஸ்க்கு வந்த மற்றொரு 'யமஹா ரே' ஸ்கூட்டரும் தீக்கிரையானது. இந்த தீ விபத்து குறித்து ஆவடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

தொடர்புடைய செய்தி