சாலையை சீரமைக்க வலியுறுத்தி சாலை மறியல்.

576பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் மெதூர் ஊராட்சிக்கு உட்பட்ட விடத்தண்டலம் வழியாக கவரைப்பேட்டை செல்லும் சாலை குண்டும், குழியுமாக இருப்பதாகவும், கடந்த 13 ஆண்டுகளாக சாலை சீரமைக்கப்படவில்லை எனவும், இதனால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் கூறி மெதூர் பகுதியில் விடத்தண்டலம், மேலப்பட்டரை உள்ளிட்ட 4 கிராமங்களை சேர்ந்த குழந்தைகள், பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் பொன்னேரி-பழவேற்காடு சாலையின் குறுக்கே மரக்கட்டைகளை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பழவேற்காடு செல்லும் சாலை, அண்ணாமலைச்சேரி செல்லும் சாலை என 2 பகுதிகளும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முறையான சாலை வசதி மற்றும் பேருந்து சேவை வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து நடந்து வரும் போராட்டத்தின் போது திடீரென மழை வந்ததால் கொட்டும் மழையிலும் போராட்டம் நடந்து வருகிறது. தேர்தலின் போது வாக்கு கேட்கும் அரசியல் பிரமுகர்களுக்கு இனி வாக்களிக்கப்போவதில்லை எனவும் கூறி போராட்டம் நடந்து வருகிறது. நிகழ்விடத்திற்கு பொன்னேரி வட்டாட்சியர் மதியழகன், எம்எல்ஏ துரை. சந்திரசேகர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி