பழவேற்காடு கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுவதால் மீனவர்கள் மீன் பிடிக்க இரண்டாவது நாளாக செல்லவில்லை
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு கடற்கரைப் பகுதியை ஒட்டி கடல் அலை சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக புயல் சின்னம் உருவாகும்மென்று இந்திய வானிலை அறிக்கை அறிவிப்பு வெளியிட்ட நிலையில் இயல்புக்கு மாறாக சுமார் 10 அடிக்கும் மேல் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. பழவேற்காடு கடற்கரைப் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசுவதால் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு குடியிருப்புகளுக்குள் கடல் நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மீனவ கிராம மக்கள் அச்சத்துடன் உள்ளனர். மேலும் பாதுகாப்பான இடங்களுக்கு வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை எடுத்துச் செல்லும் பணியிலும் பாதுகாக்கும் பணியிலும் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.