திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் தடப்பெரும்பாக்கம் மற்றும் பொன்னேரி பேருந்து நிலையம் அருகில் பாரதப்
பிரதமர் மோடியின் மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி வானொலி மூலம்
இந்தியா முழுவதும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதற்கான நேரலையை பார்க்கும் ஏற்பாட்டினை தடப்பெரும்பாக்கம் மற்றும் பொன்னேரி பகுதிகளில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட
பாஜக மற்றும் பொன்னேரி நகர பாஜகவினர் ஏற்பாடு செய்தனர். பின்னர் அயோத்தியில் நடைபெறவிருக்கும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு பொதுமக்களை அழைப்பதற்கான அழைப்புகளை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் வழங்க நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர். பின்னர் அதனை வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில்
பாஜக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் நந்தன், மாவட்ட துணைத் தலைவர் பரமானந்தம், பொன்னேரி நகர தலைவர் சிவகுமார், பொன்னேரி நகர செயலாளர் பாலாஜி, மண்டல பொதுச்செயலாளர் ரமேஷ், மாவட்ட ஆன்மீக பிரிவு
பிரபு மற்றும்
பாஜக நிர்வாகிகள் மோகன், சங்கர், டாக்டர் ராஜேந்திரன், இளங்கோவன், வெங்கடேசன், முரளி, ஹரி, சஞ்சீவ், பிரவீன், கணேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.