கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அப்துல்லா (27) தனது குடும்பத்துடன் காரில் மைசூரு சென்றுவிட்டு, சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, கோவை நீலம்பூர் அருகே காரின் முன்பகுதியில் திடீரென சத்தம் கேட்டுள்ளது. தொடர்ந்து புகை வரத் தொடங்கியது. சுதாரித்துக் கொண்ட அவர் உடனே அனைவரையும் கீழே இறங்கச் சொல்லியுள்ளார். கார் முன்பகுதியில் பற்றிய தீயில் இருந்து அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். காரில் 2 வயது குழந்தை உட்பட 6 பேர் பயணித்தனர்.