ஆவின் நிறுவனம் 4.5 சதவீதம் கொழுப்புச் சத்து மற்றும் 8.5 சதவீதம் இதர சத்துக்களுடன் கிரீன் மேஜிக் பிளஸ் என்ற புதிய வகை பாலை அறிமுகம் செய்கிறது. முழுமையான விவரங்களின்றி புதிய வகை பால் அறிமுகம் செய்யப்படுவதாக பாமக தலைவர் அன்புமணி மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மறைமுகமாக விலையேற்றத்தை கொண்டு வருவதாக பால் முகவர்கள் சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளது.