3 வயது சிறுவனின் மூச்சுக்குழாயில் சிக்கிய கொலுசு திருகாணி

563பார்த்தது
3 வயது சிறுவனின் மூச்சுக்குழாயில் சிக்கிய கொலுசு திருகாணி
பெரம்பலூரை சேர்ந்த 3 வயது சிறுவன் தவறுதலாக கொலுசில் இருந்த திருகாணியை நேற்று (டிச. 16) விழுங்கினான். அது மூச்சுக்குழாய்க்குள் சென்றது எக்ஸ்ரேவில் தெரியவந்த நிலையில் திருச்சி மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிறுவனை, அவரது பெற்றோர் அனுமதித்தனர். சிக்கலான இடத்தில் இருந்த திருகாணியை நவீன கருவி மூலம் மருத்துவர்கள் குழு அகற்றியது. தற்போது சிறுவன் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி