சபரிமலை சீசனையொட்டி கேரளாவுக்கு 4 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. விஜயவாடா, காக்கிநாடா, குண்டூர், நரசாபூரில் இருந்து கொல்லத்திற்கு இயக்கப்படும். 07177 விஜயவாடா-கொல்லம் சிறப்பு ரயில் டிச., 21, 28 இரவு 10:15 மணிக்குப் புறப்பட்டு, மூன்றாம் நாள் காலை 06:20 மணிக்கு கொல்லம் சென்றடையும். 07179 காக்கிநாடா டவுன்-கொல்லம் சிறப்பு ரயில் ஜன., 1, 8ஆம் தேதிகளில் காக்கிநாடாவில் இருந்து இரவு 11:50 மணிக்குப் புறப்பட்டு, மூன்றாம் நாள் காலை 05:30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.