தமிழகத்தில் 'ஏடிஸ் - ஏஜிப்டி' வகை கொசுக்களால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், தேனி, மதுரை, திருநெல்வேலி, நாமக்கல், தஞ்சாவூர் மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் உள்ளது. மாநிலத்தில் இந்த ஆண்டில் இதுவரை 25,000க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 12 பேர் உயிரிழந்ததாகவும் பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.