தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆன்லைன் டிக்கெட் வினியோகம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பயணிகள் ரயில் நிலையத்தின் கவுன்ட்டர்களில் டிக்கெட்களை பெற்று பயணம் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ள மெட்ரோ ரயில் நிர்வாகம் தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது.