'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா இன்று தாக்கல்

53பார்த்தது
'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை மக்களவையில் இன்று (டிச., 17) மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்யவுள்ளார். மக்களவையில் நண்பகல் 12 மணிக்கு 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை தாக்கல் செய்து அமைச்சர் உரையாற்ற உள்ளார். இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பி, அவையில் அமளி ஏற்பட்டால் அதனை கூட்டுக்குழு விசாரணைக்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுப்பி வைப்பார் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி