கேரள மாநிலம் திருச்சூரில் நேற்று (டிச. 16) பெண்ணொருவர் தனது குழந்தையுடன் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். வாசல் கேட்டை தள்ளியபடி இருவரும் விளையாடினார்கள். அந்த சமயத்தில் அந்த பெரிய கேட் திடீரென சாய்ந்தது. குழந்தை மீது கேட் சாயும் ஆபத்தான சூழல் ஏற்பட்ட நிலையில் அவரின் தாய் சாதுர்யமாக செயல்பட்டு கேட்டை தாங்கி பிடித்தார். இதனால் நடக்கவிருந்த பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.