மகாராஷ்டிரா: தானே நகரை சேர்ந்த 42 வயதான நபர் தன்னுடைய 6 வயது மகளை கடந்த ஜூன் மாதம் முதல் பலமுறை பலாத்காரம் செய்திருக்கிறார். வீட்டில் சிறுமி தனியாக இருக்கும் சமயங்களில் அவரிடம் அத்துமீறி இந்த கொடூர செயலில் ஈடுபட்டு வந்தார். இது குறித்து அண்மையில் அறிந்த சிறுமியின் தாயார் காவல் நிலையத்திற்கு சென்று புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் குற்றவாளி மீது போக்சோவில் வழக்கு பதிந்துள்ளனர்.