திருவள்ளூர்: கூட்டணி கட்சிகளுக்கு சீட் கொடுத்தால் தீக்குளிப்பேன்..மிரட்டல்

78பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் அதிமுக வடக்கு மாவட்டம் எல்லாபுரம் வடக்கு ஒன்றியம் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பெரியபாளையம் அதிமுக கிளைச் செயலாளர் சீனிவாசன் பேசுகையில் கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு 2026 கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க கூடாது அதிமுகவிற்கு மட்டுமே சீட்டு வழங்க வேண்டும் என்றும் அப்படி வழங்காவிட்டால் முதல் ஆளாக பேருந்து நிலையம் முன்பாக தீக்குளிப்பேன் என சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மாவட்ட கழக செயலாளர் பலராமன் தலைமை கழக பேச்சாளர் வண்ணை கணபதி உள்ளிட்ட அனைவரின் முன்னிலையிலும் அவர் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி பொதுக்கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். 

முன்னதாக ஆடல் பாடல் கலை நிகழ்ச்சியின் போது அங்கிருந்த ஒலிபெருக்கி ஸ்பீக்கரில் திடீரென புகை வந்ததால் பொதுக்கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டம் நடைபெற்ற போது கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் பலர் சென்றதால் அங்கு போடப்பட்டிருந்த பல இருக்கைகள் காலி இருக்கைகள் மட்டுமே காட்சியளித்தது.

தொடர்புடைய செய்தி