குழந்தை பாலினம் விவகாரம்.. 9 பேர் சஸ்பெண்ட்

76பார்த்தது
குழந்தை பாலினம் விவகாரம்.. 9 பேர் சஸ்பெண்ட்
கருவில் இருக்கும் குழந்தை பாலினம் குறித்து தெரிவித்த விவகாரத்தில் அரசு மருத்துவர் உட்பட 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சேலம் வீராணம் பகுதியில் உள்ள பசுபதி ஸ்கேன் சென்டரில் குழந்தை பாலினம் தெரிவிக்க தலா ரூ.15 ஆயிரம் வசூல் செய்வதாக புகார் எழுந்தது. புகாரின்பேரில் ஸ்கேன் சென்டரில் மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதில், ஸ்கேன் சென்டரை ஆரம்ப சுகாதார மருத்துவர் முத்தமிழ், செவிலியர் கலைமணி ஆகியோர் நடத்தியது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி