புதிய கல்விக் கொள்கைக்கு பெரும் தேவை உள்ளது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் தள பதிவில், மாநில அரசின் இருமொழிக் கொள்கையால் அண்டை மாநிலங்களை விட நமது இளைஞர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் மற்ற தென் இந்திய மொழிகளை கற்கவும் அனுமதிக்கப்படுவதில்லை என இளைஞர்கள் வேதனை. இளைஞர்களுக்கு மொழித்தேர்வு செய்யும் உரிமை இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.