தேசத் தலைவர்கள் மற்றும் தியாகிகளை கொண்டாடுவது போல அறிவியல் மேதைகளும் போற்றப்பட வேண்டும் என்கிற கருத்தில் அடிப்படையில் 1987-ம் ஆண்டு ‘தேசிய அறிவியல் நாள்’ இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. சர்.சி.வி. ராமன் தன்னுடைய நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28-ம் தேதி தேசிய அறிவியல் தினமாக அறிவிக்கப்பட்டது. சர்.சி.வி. ராமன் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்கு பெற்றுத் தந்ததுடன் உயரிய விருதான நோபல் பரிசையும் பெற்றுத் தந்தது.