தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்த நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், நடிகை விஜயலட்சுமிக்கு மாதம் ரூ.50 ஆயிரம் கொடுத்தது உண்மையா என கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஒரு காலகட்டத்தில் நாங்கள் சாகப்போகிறோம் என என்னிடம் வேலை பார்த்த ஒரு தம்பியிடம் குரல் செய்தி அனுப்பி கெஞ்சினார்கள். அதனால் எனது தம்பிகளிடம் கூறி உதவி செய்யச் சொன்னேன். அவர்களும் இரண்டு மூன்று மாதம் பணம் கொடுத்து உதவியிருக்கிறார்கள் என கூறியுள்ளார்.