பாறு கழுகுகள் கணக்கெடுப்பு துவக்கம்

73பார்த்தது
பாறு கழுகுகள் கணக்கெடுப்பு துவக்கம்
முதுமலை புலிகள் காப்பகத்தில் பாறு கழுகுகள் கணக்கெடுப்பு பணி நேற்று துவங்கியது. வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து மேற்கொள்ளும் இந்த கணக்கெடுப்பு பணி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. வனத்தின் துாய்மை பணியாளர் என்று அழைக்கப்படும் பாறு கழுகுகள், சமீப காலமாக பெருமளவில் அழிந்து விட்டன. தற்போது, முதுமலை மற்றும் மசினகுடி, அதனை ஒட்டிய சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், நெல்லை வனப்பகுதி, கர்நாடகா பந்திப்பூர், கேரளா வயநாடு பகுதிகளில் மிக குறைந்த எண்ணிக்கையில் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி