ஒரு மாதத்தில் 350 கிலோ கஞ்சா பறிமுதல் ஆட்சியர் அதிரடி பேட்டி

59பார்த்தது
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் ஆவடி ஆணையரகம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட காவல் எல்லைகளில் 1300 இடங்களில் மேற்கொண்ட சோதனையில் 350 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சியர் பிரதாப் பேட்டி.

போதை மாத்திரைகள் கூல் லிப் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள பொன்பாடி ஊத்துக்கோட்டை சத்தியவேடு ஆரம்பாக்கம் உன்கிட்ட ஆறு சோதனைச் சாவடிகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன கல்வி நிலையங்கள் அருகில் போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது போதை பொருட்களை விற்பனை செய்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பிரதாப் எச்சரித்துள்ளார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி