அசோக் லேலண்ட் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்.

78பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த வெள்ளிவயல் சாவடியில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகிறது அசோக் லேலண்ட் நிறுவனம் இந்த நிறுவனத்தில் அடிப்படை வேலை செய்வதற்காக அதாவது சுத்தம் செய்தல் பூங்காக்களை பாதுகாத்தல் மற்றும் வேறு சில எந்திரம் சம்பந்தமான கடின வேலைகளை செய்ய ஒப்பந்த ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் அவர்கள் கடந்த பத்து வருடங்களாக இங்கு வேலை செய்வதாகவும் ஆனால் தங்களுக்கு நிர்வாகம் தரும் சம்பளம் போதவில்லை என்றும் ஆகவே இந்த சம்பளத்தை உயர்த்தி தரும்படியும் இந்த நிறுவனத்தில் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்கள் நிறுவன வாயிலின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

போராட்டக்காரர்களிடம் நிறுவனம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தி அதற்கு தீர்வு காணப்படும் என்று கூறியிருந்த நிலையில் நிரந்தர தீர்வுக்காக ஊழியர்கள் காத்து இருக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி