நாதக சீமான், பெரியார் குறித்து அவதூறு கருத்துக்களை பகிர்ந்ததாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், இயக்குநரும், நடிகருமான சமுத்திரகனி, சீமானை விமர்சித்து பேசியதாக இணையத்தில் ஒரு கருத்து பரவி வருகிறது. அதில்,“சமத்துவம், சமூகநீதி, பெண்ணுரிமைக்காக போராடிய தந்தை பெரியரை பற்றி அவதூறு பரபப்புவது மிக மோசம். சீமான் செய்வது அயோக்கியத்தமான அரசியல் மட்டுமல்ல ஆர்எஸ்எஸ் அரசியல்” என சமுத்திரகனி பேசியதாக செய்தி வெளியானது. ஆனால், தற்போது அது உண்மை இல்லை என்பது தெரியவந்துள்ளது.