விழுப்புரம்: விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் கழிவு நீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்த விவகாரம் தொடர்பான சிசிடிவி காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சிசிடிவி குறித்து காவல் துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், “சிசிடிவி காட்சியில் ஆசிரியர் ஒருவர் இறந்த குழந்தையை கையில் வைத்துக்கொண்டே தேடுவதுபோல் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த செய்தி முற்றிலும் தவறு, அவரது கையில் இருப்பது மற்றொரு ஆசிரியரின் குழந்தை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.