நாகப்பட்டினம்: வள்ளி என்ற பெண், தனது கணவர் கார்த்திகேசனுக்கும் சுகன்யா என்ற பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்ததை கண்டுபிடித்தார். இது தொடர்பாக தம்பதி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 2016-ல் சுகன்யா வீட்டிற்கு சென்ற வள்ளி அவர் மீது ஆத்திரத்தின் உச்சியில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கொன்றார். இதையடுத்து கைது செய்யப்பட்ட வள்ளிக்கு நேற்று (ஜன. 10) நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.