சிறையில் கைதியுடன் உடலுறவு கொண்ட லண்டன் பெண் சிறை அதிகாரிக்கு 15 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 30 வயதான சிறை அதிகாரி லிண்டா டி சௌசா அப்ரூ கடந்த ஆண்டு ஜூன் 25 அன்று HMP வாண்ட்ஸ்வொர்த்தில் உள்ள ஒரு சிறையில் கைதியுடன் உடலுறவு கொண்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானது. இதுகுறித்த வழக்கு விசாரணையில் கடந்த ஜனவரி 6 அன்று லிண்டாவுக்கு 15 மாதங்கள் சிறை தண்டனை அளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அவர் லண்டனின் புல்ஹாம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.