நெல்லை: இசக்கி முத்து (60) என்பவரின் மகள் ராஜலட்சுமி. இவருக்கும் சுடலை முத்து என்பவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த டிச. 31-ல் சுடலை குடிபோதையில் மனைவி ராஜலட்சுமியுடன் தகராறில் ஈடுபட்டார். இசக்கி அவரை தடுத்த போது மாமனாரை சுடலை கத்தியால் விலாவில் குத்தினார். காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (ஜன. 10) உயிரிழந்தார். இதையடுத்து குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.