துபாயில் நடைபெற்று வரும் 24 ஹவர்ஸ் கார் ரேஸில் நடிகர் அஜித் பங்கேற்றுள்ளார். மேலும், அவரைக் காண அங்கு அஜித் ரசிகர்கள், ஏராளமானோர் கூடியுள்ளனர். இந்நிலையில், ரேஸ் நடக்கும் இடத்தில் அஜித்தின் ‘ஆலுமா டோலுமா’ பாடம் ஒலிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் துள்ளி குதித்துள்ளனர். இந்த பாடலை இசைத்த அனிருத், இந்த வீடியோவை தனது ‘X’ தளத்தில் பகிரிந்து, ஃபையர் விட்டுள்ளார். நேற்று நடந்த ரேஸில் வெற்றிப் பெற்ற அஜித், அடுத்த சுற்றுக்குத் தேர்வானார்.