திருவள்ளூர் அடுத்த காக்களூரைச் சேர்ந்தவர் சீரஞ்சீவி, 40. இவர், கடந்த 1ம் தேதி குடும்பத்துடன், ஆவடியில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றார்.
மறுநாள் காலை வீட்டிற்கு வந்த போது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, 6 சவரன் தங்க நகை, 1 கிலோ வெள்ளிப் பாத்திரங்கள், 2 வைர மூக்குத்தி திருடு போனது தெரிய வந்தது.
இதுகுறித்து சீரஞ்சீவி கொடுத்த புகாரின்படி, திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.