தாமரை குளத்தில் குப்பை கொட்டுவதால் துர்நாற்றம்

84பார்த்தது
தாமரை குளத்தில் குப்பை கொட்டுவதால் துர்நாற்றம்
திருத்தணி நகராட்சி, இரண்டாவது வார்டு திருப்பதி செல்லும் பைபாஸ் சாலையில் தாமரை குளம் உள்ளது. இக்குளம்ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் இருந்தது.

குளத்தில் தண்ணீர் இருந்தால் பைபாஸ், பி. எம். எஸ். , நகர், செந்தமிழ் நகர் உள்பட அதனை சுற்றியுள்ள பகுதியில்நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும். இதனால் இரண்டாயிரம் வீடுகளில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது.

இந்நிலையில், குளத்தை முறையாக பராமரிக்காததால் தற்போது குளத்தை ஆக்கிரமித்து சிலர்வீடுகள் கட்டியுள்ளதால் குளத்தின் பரபரப்பு குறைந்து விட்டது.

மேலும், குளத்தில் பைபாஸ் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் ஓட்டல்கள் கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால் குளத்தில் தண்ணீர் மாசு அடைந்தும் துர்நாற்றம் வீசுகிறது. இது தவிர குளத்தில் முட்செடிகள் வளர்ந்துள்ளன.

எனவே, குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி