மீனவர்கள் விவகாரம்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

54பார்த்தது
மீனவர்கள் விவகாரம்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
மீனவர்கள் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், "தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது அடிக்கடி கைது செய்யப்படுகிறார்கள். இலங்கை நீதிமன்றம் மீனவர்களுக்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்துள்ளது. எனவே மீன்பிடி படகுகளையும், மீனவர்களையும் விடுவிக்கவும், மனிதாபிமான அடிப்படையில் அயராதத் தொகையை தள்ளுபடி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி