பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து இன்று (செப்.5) சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் கூறியதாவது, “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். 90% விசாரணை முடிவடைந்துவிட்டது. கொலைக்கான காரணத்தை விரைவில் தெரிவிப்போம். இதில் ஈடுபட்ட முக்கிய நபர்கள் குறித்து விரைவில் தெரிவிக்கப்படும். ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதானவர்களின் சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.