காகத்தை அகற்ற முயன்ற போது மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

84பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம், புழல் விநாயகபுரம் வி. எம். கே நகரை சேர்ந்தவர் சாமுவேல்ராஜ் அவரது மகன் டேவிட் ஜெயராஜ் (வயது 28 ) இவர் தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார். இன்று(செப்.23) காலை இவரது வீட்டில் முன்பிருந்த 3000 வாட் கொண்ட மின்சார டிரான்ஸ்பார்மரில் காகம் ஒன்று இறந்து தொங்கிக் கொண்டிருந்தது.
இதனை பார்த்த அவர் தனது வீட்டின் மேல் மாடிக்கு சென்று வீடு துடைக்கும் கம்பியை கொண்டு காகத்தை அகற்ற முற்பட்டபோது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.

பின்னர் அவரை அருகில் உள்ளோர் காப்பாற்ற மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் வழியிலேயே உயிரிழந்தது தெரியவந்தது. இது பற்றி தகவல் அறிந்த புழல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புழல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இறந்த டேவிட்ஜெயராஜிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி