முத்துமாரியம்மன் கோவிலில் வேப்பஞ்சேலை வழிபாடு

56பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த குண்ணமஞ்சேரியில் சுமார் முன்னூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடிமாத ஐந்தாவது வார திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழாவின் முதல் நிகழ்வாக கைலாய வாத்தியம் இசைக்க மேளதாளம் முழங்க பக்தர்கள் புடைசூழ கரகம் சுமந்த சாமியாடி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தடைந்தார். இதனை தொடர்ந்து விழாவின் சிறப்பம்சமான வேப்பஞ்சேலை சாற்றும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் வேப்பஞ்சேலை அணிந்து ஆலயத்தை மூன்றுமுறை வலம்வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவின் நிறைவாக முத்து மாரியம்மனுக்கு மஹாதீபாராதனை காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் மகிஷாசுரமர்த்தினி அவதாரத்தில் அம்மன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

தொடர்புடைய செய்தி