நிலத்தை மீட்க கோரி பொதுமக்கள் போராட்டம்

585பார்த்தது
கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயல் காலனி பகுதியில் 500 க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள ஆதிதிராவிடச் சேர்ந்த விவசாயிகள் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை ஒட்டி சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் 1992 ஆம் ஆண்டு வரை நெல், வேர்க்கடலை, சம்பா, பச்சை பயிறு உள்ளிட்ட பல்வேறு விதமான பயிர்களை விவசாயம் செய்து நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சர்க்கரை ஆலை அமைக்க தமிழக அரசு 30 வருடங்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த 72பேருக்கு சொந்தமான 78. 34ஏக்கர் நிலத்தை வீட்டிற்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு என்றும், 1சென்ட் 1400ரூபாய்க்கு என்றும் சர்க்கரை ஆலைக்கு அரசு வாங்கியது.

மேலும் ஆலை துவங்கு பங்கு தொகை செலுத்தியும் அனைவரும் பங்குதாரர்களாக மாறி உள்ளனர்.

தொடர்ந்து 31ஆண்டுகளாக சர்க்கரை ஆலை துவக்கப்படாத நிலையில், சர்க்கரை ஆலைக்காக தந்த நிலத்தை தங்களுக்கே திருப்பி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

தொடர்புடைய செய்தி