கோடை விடுமுறை - மதுரையில் சிறப்பு ரயில் இயக்கம்

59பார்த்தது
கோடை விடுமுறை - மதுரையில் சிறப்பு ரயில் இயக்கம்
கோடை விடுமுறையால் ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை சமாளிக்க மத்தியப் பிரதேச மாநில ஜபல்பூரில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில் இயக்க மேற்கு மத்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, ஜபல்பூரில் இருந்து ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் வரும் அனைத்து வியாழக்கிழமை தோறும் மாலை 4.25 மணிக்கு புறப்படுறது. சனிக்கிழமை அதிகாலை 12.15க்கு மதுரை வந்தடைகிறது. மறு மார்க்கமாக மதுரையில் இருந்து சனிக்கிழமை தோறும் இரவு 11.35 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை ஜபல்பூர் சென்றடைகிறது.

தொடர்புடைய செய்தி