முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான பஞ்சாப் அரசு, ஹாக்கி அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் உட்பட பல நட்சத்திர விளையாட்டு வீரர்களை பஞ்சாப் போலீஸ் சேவையில் பணியமர்த்தியுள்ளது. பிபிஎஸ் அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட 7 விளையாட்டு வீரர்களில் ஹர்மன்ப்ரீத் சிங் மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோர் அடங்குவர். விளையாட்டு வீரர்களுக்கான நியமனக் கடிதங்களை முதலமைச்சர் பகவந்த் சிங் மான் வழங்கினார்.