கடல் ஜிப்சிகள், கடல் நாடோடிகள் என்று அழைக்கப்படும் பஜாவ் மக்கள் தென்கிழக்கு ஆசியாவில் பாரம்பரியமாக கடலில் வீடு கட்டி வசிக்கும் ஒரு பழங்குடி மக்கள் ஆவர். இவர்கள் உலக அளவில் தண்ணீருக்குள் எந்தவிதமான மூச்சுக் கருவிகளும் இல்லாமல் டைவ் அடிப்பதில் வல்லவர்களாக திகழ்கின்றனர். 'சம பஜாவ்' என்றும் அழைக்கப்படும் இவர்கள் கடலுக்குள் 5 நிமிடங்கள் வரை மூச்சை அடக்கும் திறமையை இயற்கையாகவே பெற்றுள்ளனர்.