துர்க்கை அம்மன் கோயிலில் 1008 பால்குடம் ஊர்வலம்

568பார்த்தது
சென்னை அருகே போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கலில் உள்ள அருள்மிகு துர்க்கை அம்மன் கோயிலில் 10ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு 1008 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

அய்யப்பன்தாங்கல் பேருந்து நிலைய அருகே உள்ள முனீஸ்வரர் கோயிலில் இருந்து 1008 பால்குடங்களை பெண்கள் தலையில் சுமந்து கொண்டு ஊர்வலமாக நடந்து சென்றனர். நிறைவாக கோவில் வளாகத்தில் ஊர்வலம் முடிவடைந்த நிலையில் பக்தர்கள் கொண்டு வந்த பால்குடங்களில் இருந்த பாலை அம்மனுக்கு ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது.

மழை பெய்து பூமி செழிக்கவும், கோடை வெப்பம் குறையவும், மக்கள் நோய் நொடியின்றி, துன்பங்கள் நீங்கி வாழ, துர்க்கை அம்மனை குளிர்விக்கும் விதமாக இந்த பாலாபிஷேகம் ஆண்டுதோறும் நடைபெற்றது. வருகிறது இதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்றன. பின்னர் அலங்காரம் செய்யப்பட்ட அம்மன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கோயில் பரம்பரை தர்மகத்தா துளசி ஏழுமலை, செந்தில்குமார், அருள்குமார், ஊராட்சி மன்ற தலைவர் ஜமீலா பாண்டுரங்கன் மற்றும் ஊர் பொதுமக்கள், விழா குழுவினர், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதையடுத்து இரண்டாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி