பாஜக வேட்பாளர் ஆதரித்து நடிகை நமீதா பிரச்சாரம்

2959பார்த்தது
பாஜக வேட்பாளரை ஆதரித்து திருவொற்றியூர் பகுதியில் திறந்த வெளி வாகனத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நடிகை நமீதா வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பீல் பாஜக வை சேர்ந்த பால் கனகராஜ் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

வேட்பு மனு தாக்கல் செய்து வேட்பு மனு ஏற்கபட்ட தினத்தில் இருந்தே வடசென்னை பகுதிகளில் பால் கனகராஜ் தினந்தோறும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் நேற்று அவரை ஆதரித்து நடிகையும், செயற்குழு உறுப்பிருமான நமீதா திருவொற்றியூர் பெரியார் நகர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பீல் ஈடுபட்டார்.

நமீதாவிற்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்த நிலையில் கொளுத்தும் வெயிலில் நமீதா திறந்தவெளி வாகனத்தில் பால் கனகராஜிற்காக மத்திய அரசின் சாதனைகளை பட்டியலிட்டும், தொகுதிக்கு எவ்வாறு பரிச்சையமானவர் என்றும் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சாலையோரம் இருந்தவர்கள் வாகனத்தில் செல்வோர்கள் என அனைவரும் நமீதாவை வேடிக்கைபார்த்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி