தமிழகத்தில் நேற்று(ஏப்ரல் 2) தினசரி மின் நுகர்வு முதல்முறையாக 430.13 மில்லியன் யூனிட்டாக பதிவாகியுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த மாதம் 29ஆம் தேதி பதிவான 426.44 மில்லியன் யூனிட் அதிகபட்சமாக இருந்தது. கோடைக்காலம் என்பதால் மின்சார பயன்பாடு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அரசுக்கு சொந்தமான மின் பயன்பாட்டு டிஸ்காம் இன்னும் கூடுதல் மின் தேவை வரும் நாட்களில் ஏற்படலாம் என்று கணித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் மின்சார தேவை 21,000 மெகாவாட்டை கடக்க வாய்ப்புள்ளது என அதிகாரிகள் கூறுகின்றனர்.